விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி : அமைச்சர் அறிவிப்பு
உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அரசி இறக்குமதி தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
10,000 மெற்றிக் தொன் அரிசி
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கைக்கு தற்போது அரிசி 22,000 மெற்றிக் தொன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அந்த அரிசியை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தறபோது இடம்பெற்று வருகின்றது. மேலும் 10,000 மெற்றிக் தொன் அரிசி கிடைக்கவுள்ளது.
சந்தையின் தேவையைக் கருத்திற்கொண்டு அரிசி இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப் பகுதியை நீடிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
உள்நாட்டு விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு அரிசி இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயற்பாடு சில கட்டுப்பாடுகளுடனே இடம்பெறுகின்றது" என நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |