சயனைட் கட்டிக்கொண்டு போராடிய ஒரு இனம்: சபையில் ரிசார்ட் எம்.பி ஆவேசம்
இந்த நாட்டில் சிங்கள பேரினவாதிகளோடு வாழ முடியாமல் தமிழீழம் தாருங்கள் என்று சயனைட் வில்லைகளைக் கட்டிக்கொண்டு ஒரு இனம் போராடியது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசார்ட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்தார்.
நேற்றைய (21) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நாட்டில் மண்ணுக்கான ஒரு போராட்டம் நடந்த வரலாறு இருக்கின்றது. முப்பதாயிரம், நாற்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்களும் கொல்லப்பட்டார்கள், சிங்கள மக்களும் கொல்லப்பட்டார்கள். இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டார்கள். சாதாரண மக்களும் கொல்லப்பட்டார்கள். என்னைப் போன்ற ஒரு இலட்சம் முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். அவ்வாறான ஒரு வரலாறு இந்த நாட்டிலே இருக்கின்றது.
இன்னும் 100 வருடங்களுக்கு தேசிய மக்கள் சக்தி தான் ஆளுங்கட்சியாக இருக்கப் போகின்றதா? இந்த அரசின் ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு சபாநாகருக்கு இருக்கின்றது. சபாநாயகர் இந்த நாடாளுமன்றத்தில் ஒரு பொம்மை போல் இருக்கின்றார். ஒரு நாள் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கதைகளை கேட்க மாட்டார்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
