"விஜய் மாமா, ஹாய்" -வைரலாகும் ரிஷி சுனக்கின் காணொளி
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பிந்திய காணொளி ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
பிரபல செஃப் சஞ்சய் ரெய்னா என்பவர் பகிர்ந்துள்ள காணொளி ஒன்றில், அவருடன் இணைந்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் காணொளி ஒன்றில் பேசுகிறார்.
ஒருவரை அறிமுகம் செய்யப் போகிறேன்
செஃப் சஞ்சய் ரெய்னா பகிர்ந்த அந்த காணொளியில், ஒருவரிடம் காணொளியில் பேசும் அவர், "மாமா, நான் உங்களுக்கு ஒருவரை அறிமுகம் செய்யப் போகிறேன்" என கூறி விட்டு, கமராவை பிரதமர் ரிஷி சுனக் பக்கம் திருப்புகிறார்.
தன் பக்கம் கமரா வந்ததுமே, "விஜய் மாமா, ஹாய். நான் ரிஷி. எப்படி இருக்கிறீர்கள்?. 10 டவுனிங் தெருவிற்கு வரும் போது என்னை சந்திப்பீர்கள் என நம்புகிறேன்.
சிரித்த முகத்துடன் பேசும் ரிஷி
Visa on arrival ab pakka 😊😊#RishiSunak pic.twitter.com/imSIhuEgKB
— Sanjay Raina (@sanjayraina) October 27, 2022
எனவே நீங்கள் இங்கு வந்ததும் உங்கள் சஞ்சயை டவுனிங் தெருவுக்கு அழைத்து வர சொல்லுங்கள்" என சிரித்த முகத்துடன் ரிஷி பேசுகிறார்.
விஜய் மாமா, ஹாய் என ரிஷி சுனக் சொன்ன விஷயம் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.