மக்கள் பணத்தை வீணடிக்கும் சுனக் - அரச அறிக்கையில் வெளியான அதிர்ச்சி..!
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக் 6 வார காலத்தில் விமான பயணத்திற்காக மட்டும் 5 இலட்சம் பவுண்டுகள் செலவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பு ஏற்ற பின்னர் எகிப்து, பாலி, லாத்வியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்று வந்துள்ளார்.
பாலி பயணத்தின் போது ரிஷி சுனாக் தம்முடன் 35 அதிகாரிகளை அழைத்துச் சென்றுள்ளார். தனியார் விமானம் ஒன்றை பிரிட்டன் அரசு முன்பதிவு செய்திருந்தாலும், அது அரசாங்க விமானம் போன்றே கொடி பொறிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
தனிப்பட்ட செலவுகள்
பொதுமக்கள் வரிப்பணத்தில் வீண் செலவுகளை ஏற்படுத்துவதாக ஏற்கனவே ரிஷி சுனக் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.
பிர்த்தானிய அரசாங்க புள்ளிவிபரங்கலின் படி விமான வாடகைக்கு £107,966 செலவாகும் என்றும், ரிஷி சுனக்கின் விசா, தங்குமிடம், பயணம் மற்றும் உணவு உட்பட தனிப்பட்ட செலவுகள் £3,483 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியில் நடந்த G20 உச்சிமாநாட்டிற்கு அவரது ஐந்து நாள் பயணத்திற்கு ஜெட் விமானத்தை வாடகைக்கு £341,857 செலவிடப்பட்டதுடன் தனிப்பட்ட செலவுகளுக்காக £11,204 பயன்படுத்தப்பட்டுள்ளது.
கன்சர்வேடிவ் அரசாங்கம்
டிசம்பரில் லாட்வியா மற்றும் எஸ்டோனியாவிற்கு ஒரு கூட்டுப் பயணப் படைக் கூட்டத்திற்காக அவர் மேற்கொண்ட பயணத்தின் பயணச் செலவு £62,498 பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் லிபரல் டெமாக்ராட் காலநிலை செய்தித் தொடர்பாளர் வேரா ஹோப்ஹவுஸ் கூறுகையில்,
“மக்கள் தங்கள் சொந்த செலவுகளுக்கான பற்றுசீட்டுகளை செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நேரத்தில் இது வரி செலுத்துவோரின் பணத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் வீணடிப்பதாகும்.
மீண்டும், இந்த கன்சர்வேடிவ் அரசாங்கம் முற்றிலும் மக்களின் பணத்தை செலவழிக்கிறது".என தெரிவித்தார்.
