மலையக சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
நுவரெலியா (Nuwara Eliya) நகரத்திற்கு நுழையும் பல முக்கிய வீதிகளில் அடர்ந்த பனிமூட்ட நிலை காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானு ஓயாவிலிருந்து நுவரெலியா வரையும், நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து ஹக்கல வரையும், நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் பம்பரகலை வரையும் இந்த அடர்ந்த பனிமூட்ட நிலை நிலவுகிறது.
அடர்ந்த பனிமூட்ட நிலை
அவ்வப்போது ஏற்படும் அடர்ந்த பனிமூட்ட நிலை காரணமாக, இந்த வீதிகளில் வாகனங்களை இயக்கும்போது, வாகனங்களின் முன்பக்க பிரதான விளக்குகளைப் பயன்படுத்தி, மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு நுவரெலியா காவல்துறையினர் வாகன ஓட்டுநர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து மழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது நாளை (21) பிற்பகல் 2 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
