சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு கொள்ளையரால் ஏற்பட்ட நிலை
Sri Lankan rupee
Sri Lanka Tourism
Sri Lanka Police Investigation
Dollars
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணொருவரின் பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக காலி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலி சமனல மைதானத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவேளை ஒரு குழுவினர் அவ்விடத்துக்கு வந்ததுடன் அவர்களில் ஒருவர் பெண்ணின் பையை எடுத்துக்கொண்டு ரத்கம கடற்கரையை நோக்கி ஓடியுள்ளார்.
தப்பியோடிய பெண்ணுக்கும் காயம்
இதன்போது, பெண்ணும் அவர்களிடமிருந்து தப்பி ஓடியதால், கீழே வீழ்ந்ததில் அவருக்கு கீறல் ஏற்பட்டது.
இந்தப் பையில் ரூபா 90,000 இலங்கைப் பணம் 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்கள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி