ரொனால்டோவிற்கு பேரதிர்ச்சி - நான்கு ஆண்டுகள் தாமதமாகப்போகும் பாரிய கனவு..!
பாரிஸ் நகரில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கட்டும் ஆடம்பர சொகுசு விடுதியானது இன்னும் நான்காண்டுகள் தாமதமாக திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிஸ் நகரில் சுமார் 53 மில்லியன் பவுண்டுகள் தொகையில் கட்டப்பட்டுவரும் சொகுசு விடுதியானது 2021ல் திறப்பதாக திட்டமிட்டு வேலைகள் தொடங்கப்பட்டது.
ரொனால்டோவின் கனவு என கூறப்படும் இந்த விடுதியானது, தற்போது 6 ஆண்டுகள் தாமதமாக திறக்க திட்டமிட்டுள்ளனர்.
கனவு திட்டமான சொகுசு விடுதி
மொத்தம் 210 அறைகள் கொண்ட இந்த சொகுசு விடுதியில் நீச்சல் குளம் மற்றும் கட்டிடத்தின் உச்சியில் மதுபான விடுதி என திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் முடித்து, விடுதி திறப்பு விழா காணும் முன்னர் ரொனால்டோ கால்பந்து அரங்கில் இருந்து ஓய்வை அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். கொரோனா பெருந்தொற்று, கடுமையான ஊரடங்கு விதிகள் என கட்டுமான பணிகள் தாமதத்திற்கு முதன்மை காரணங்களாக கூறப்படுகிறது.
ஆனால், ரொனால்டோ ஓய்வை அறிவித்த பின்னர் அவரது கனவு திட்டமான இந்த விடுதி செயல்பட துவங்கும் என்றால், சர்வதேச கவனத்தை ஈர்க்க தவறிவிடும் என்றே நிபுணர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
விடுதி தொடர்பில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிப்பை வெளியிட்ட ரொனால்டோ, 2021ல் திறப்பு விழா காண இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் தற்போது, 2027 அல்லது 2028ல் தான் விடுதி திறக்கப்படும் என்ற நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
