தொழிற்சங்க நடவடிக்கைகளில் குதிக்கும் கிராம சேவகர்கள்
Sri Lanka
SL Protest
Sri Lanka Government Gazette
By Shadhu Shanker
8 months ago
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிராம சேவகர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
தன்னிச்சையான கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 12,13 திகதிகளில் சேவை நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு
தேர்தல் நடவடிக்கைகள்
அகில இலங்கை சுதந்திர கிராம சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.கே.ஜி.ஜகத் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தமது தொழில்சார் நடவடிக்கையால் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அண்மைகாலமாக அரசஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் அதிகம் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
