சிரியாவில் குண்டுமழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்
Syria
Russia
By Pakirathan
சிரியாவில் ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் மற்றும் 9 பொதுமக்கள் உள்ளடங்கலாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் ரஷ்ய விமானங்கள் நேற்று கடும் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த ஆண்டு சிரியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் இது என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் குண்டுகள் மழைபோல் பொழியப்பட்டதாக அங்கிருந்து தப்பித்தவர்கள் கூறியுள்ளனர்.
