சர்ச்சைகளுக்கு மத்தியில் உக்ரைனின் தலைநகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
World
By Dilakshan
உக்ரைன் தலைநகர் கெய்வ் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தாக்குதலின் போது எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட நிலையில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு கீழுள்ள பதுங்கு அறைகளில் அடைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யா ஏவிய 18 ஏவுகணைகள் மற்றும் 25 ஆளில்லா விமானங்களை உக்ரைன் வான்தடுப்பு மையங்களின் மூலம் தடுத்து அழித்துள்ளது.
சிறிதளவே சேதம்
அதேவேளை, ரஷ்யாவின் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டமையால் உக்ரைனில் சிறிதளவே சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அறிவித்துள்ளது.
எனினும், ரஷ்யாவின் பெரிய தரையிறங்கும் கப்பல்களான யமல் மற்றும் அசோவ், ஒரு தகவல் தொடர்பு மையம் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், ஆகியவற்றை உக்ரைன் நேற்றைய தினம் தாக்கியழித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி