உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா கோர தாக்குதல் (படங்கள்)
தெற்கு உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ரொக்கெட் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலில் வைத்தியசாலை ஊழியர்கள், தாய்மார்கள் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
குண்டுவெடிப்பினால் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் குழந்தைகள் சிகிகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.








தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.