ரஷ்யாவில் கூகுளுக்கு விதிக்கப்பட்டது தடை
russia
ukraine
google
blocked
invasion
By Sumithiran
உக்ரைன் மீதான தமது இராணுவத்தின் தாக்குதல் பற்றி தவறான தகவல்களை பரப்புவதால் ‘கூகுளுக்கு’ தடை விதிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் தகவல் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ‘கூகுள்' தேடுதளத்திற்கு தடை விதித்து அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல் பற்றி தவறான தகவல்களை பரப்புவதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறி உள்ளது.
‘கூகுள்' இந்த மாதத்தில் ரஷ்யாவில் இணையதளத்தில் எந்த விளம்பரமும் வெளியிடப்படாது என்று உறுதியளித்து இருந்தது.
இருந்தபோதிலும் தவறான தகவல்களை பரப்ப உதவுவதாக தெரிவித்த ரஷ்ய ஒழுங்குமுறை ஆணையம் கூகுளுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி