ரஷ்யா பக்கம் திரும்பிய அமெரிக்காவின் கவனம்! இராணுவ தளபதியின் அறிவிப்பால் பதற்றம்
அமெரிக்க படையினரை குறிவைத்து தாக்குதல்களுக்கு உதவி செய்பவர்களுக்கு அமெரிக்கா வலுவான மற்றும் கடுமையான பதிலை வழங்கி வருவதாக ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி அலெக்ஸ் கிரின்கெவிச் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட்டில் நடைபெற்ற கேள்வி பதில் அமர்வில், ஜனநாயகக் கட்சி செனட்டர் ஒருவர், ஈரானுக்கு ரஷ்யா வழங்கும் உதவியைப் பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தளபதி, “எந்தவொரு நாடு அல்லது அமைப்பு அமெரிக்க படையினரை ஆபத்தில் ஆழ்த்தும் வகையில் செயல்பட்டால், அதற்கு நாம் வலுவாக பதிலளிக்க வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் உளவு நடவடிக்கை
அதன்போது, குறித்த செனட்டர் “அப்படியானால் நாம் ஏன் இதுவரை அதை செய்யவில்லை?” என்று கேள்வி தொடர்ந்தும் எழுப்பியுள்ளார்.

Image Credit: Kyiv Post
“அமெரிக்க படைகளைக் குறிவைத்து தாக்குதல்களுக்கு உதவி செய்பவர்களுக்கு எதிராக நாங்கள் வலுவாக பதிலளித்து வருகிறோம் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இதை பற்றி மேலும் விபரங்களை ரகசிய அமர்வில் விளக்குவேன்,” என்று கிரின்கெவிச் பதில் அளித்துள்ளார்.
ஈரானுக்கு அமெரிக்க படைகள் உள்ள இடங்கள் குறித்து ரஷ்யா உளவுத் தகவல்கள் வழங்கி வருவதாகவும், அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் இலக்குகளை தாக்க பயன்படுத்தப்படும் மேம்பட்ட ட்ரோன் உத்திகளை உருவாக்கவும் உதவி செய்து வருவதாகவும் வெளியான தகவல்களை தொடர்ந்து மேற்படி கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |