கோர தாக்குதலுக்கான பதிலை வழங்கியது ரஷ்யா: உக்ரைனில் நடந்தது என்ன..!
சமீபத்தில் சுமி பகுதியில் உக்ரேனிய இராணுவ அதிகாரிகளின் கூட்டத்தையே ரஷ்யா தாக்கியதாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய எல்லையிலிருந்து 31 கிலோமீட்டர் (19.2 மைல்) தொலைவில் உள்ள வடகிழக்கு நகரமான சுமியில், புனித பாம் ஞாயிற்றுக்கிழமையைக் கொண்டாட மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் கூறியது.
அதன்போது, 34 பேர் கொல்லப்பட்டதாகவும் 119 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல்
உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின்படி, ரஷ்யாவின் வோரோனேஜ் மற்றும் குர்ஸ்க் பிராந்தியங்களில் இருந்து ஏவப்பட்ட இரண்டு இஸ்கந்தர்-எம் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உலகம் உறுதியாக பதிலளிக்க வேண்டுமென உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தனது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தார்.
உக்ரைனின் மனித கேடயங்கள்
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த தாக்குதலில் 60 க்கும் மேற்பட்ட உக்ரைனிய வீரர்களே கொல்லப்பட்டதாகவும், உக்ரைன் தனது மக்களை "மனித கேடயங்களாக" பயன்படுத்துவதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன், மக்கள் அடர்த்தி மிக்க நகரத்தின் மையத்தில் இராணுவ வீரர்களை உள்ளடக்கிய நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருப்பதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
