சக்திவாய்ந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்கிய ஐரோப்பா
யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற பொருள்படும் சமிக்ஞையுடன் நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்டு வந்த, தனது முக்கிய படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது உக்ரைன்.
உக்ரைன் படைகள் ஐந்து முனைகளில் தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதாக அல்லது முன்னேறிக் கொண்டிருப்பதாக உக்ரைன் சார்பு ஊடகங்களும், தம்மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் உக்ரைன் படைகள் மீது தாம் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தி அவர்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பதாக ரஷ்யாவும் தெரிவித்து வருகின்றன.
ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற கக்கோவா நீர்மின்சார தயாரிப்பு அணையை ரஷ்யப் படைகள் உடைத்து விட்டதாக செய்திகள் வெளியாகக் கொண்டிருக்கின்றன.
உக்ரைனியப் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் நோக்கத்தில், உக்ரைனிய யுத்த தாங்கிகளின் நகர்வுகளினுடைய வேகத்தை குறைக்கும் நோக்கத்தில், அந்த அணை உடைப்புச் செயலை ரஷ்ய படைகள் மேற்கொண்டுள்ளதாக உக்ரைன் குற்றம் சுமத்துகின்றது.
கக்கோவா நீர்மின்சார தயாரிப்பு அணையை ரஷ்யப் படைகள் உடைத்து விட்டதன் மூலம், உக்ரைனின் மூலை முடுக்குகள் அத்தனையிலும் இருந்து ரஷ்ய பயங்கரவாதிகள் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் உலகுக்கு கூறி இருக்கின்றார்கள் என்று தெரிவித்திருந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.
உக்ரைனின் ஒவ்வொரு அடி நிலத்திலும், ரஷ்யர்கள பயங்கரவாதச் செயல்களையே தொடர்ந்து செய்து வருவதால், ஒரு அடி நிலத்தில் கூட அவர்களை விட்டு வைக்காமல், அவர்களை உக்ரைனை விட்டு உக்ரைன் படைகள் விரட்டி அடிக்கும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
பற்றி எரிய ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்ரைன் களமுனை நிலவரங்கள் பற்றியும் ரஷ்யா உக்ரைன் படைகளின் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் பற்றியும் அவ்வப்போது நாம் விரிவாக பார்க்க இருக்கின்ற அதேவேளை,
தற்போதைய உக்ரைன் களமுனைகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்ற முக்கியமான ஆயுதம் பற்றியும், அந்த ஆயுதத்தை பாவிப்பதில் உக்ரைன் படைகள் பயன்படுத்தி வருகின்ற முக்கிய தந்திரோபாய நுணுக்கம் பற்றியும் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் மிகச் சுருக்கமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
களமுனை நிலவரங்கள்
முன்னைய பதிவுகள்
