உக்ரைன் அதிபரை கொல்ல முயன்ற ரஷ்ய படை -வெளியானது காணொளி
உக்ரைனில் ககோவ்கா நீர்மின் நிலைய அணை தகர்க்கப்பட்டதை அடுத்து நிலைமையை நேரில் சென்று பார்வையிட்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை ரஷ்யர்கள் கொலை செய்ய முயற்சி செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அணை தகர்க்கப்பட்டதால் டினிப்ரோ ஆற்றின் குறுக்கே 4.8 பில்லியன் கலன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதில் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கெர்சன் நகரின் பல குடியிருப்புகளின் கூரை மட்டுமே வெளியே தெரியும் அளவுக்கு சில பகுதிகள் முற்றாக நீருக்கடியில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தால் 42,000 பேர் ஆபத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரில் சென்ற அதிபர்
இந்நிலையில், இன்று (ஜூன் 8) உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கெர்சன் பகுதிக்கு வந்தார், அங்கு வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
அவர் அங்கு வருவார் என அறிந்த ரஷ்ய படையினர், அவரை குண்டு வீசி கொல்ல முயற்சி செய்ததாக தெரியவந்துள்ளது. இதனை உறுதிசெய்யும் விதமாக இரண்டு காணொளியும் வெளியாகியுள்ளது.
வெளியான காணொளிகள்
Russians tried to kill Zelenskyy during his visit to Kherson
— NEXTA (@nexta_tv) June 8, 2023
On June 8, Volodymyr Zelenskyy arrived in #Kherson region, where dozens of settlements were flooded after the explosion of the #KakhovkaHPP.
The first video shows Zelenskyy standing with local residents near the… pic.twitter.com/xdbqLAuQ29
முதல் காணொளி, மக்களை வெளியேற்றும் பணி நடந்து கொண்டிருந்த வெள்ளம் நிறைந்த தெருவுக்கு அருகில் உள்ளூர்வாசிகளுடன் ஜெலென்ஸ்கி நிற்பதைக் காட்டுகிறது. அதன்பின்னர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு பகுதியான மைகோலேக்கு உக்ரைன் அதிபர் சென்றார்.
அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே, ரஷ்ய படையினர் ஜெலென்ஸ்கி இருந்த அதே தெருவில் எறிகணை தாக்குதலை நடத்தினர். அந்த காணொளியும் வெளியாகியுள்ளது.
