உக்ரைன் படையினரை கொன்று குவித்த ரஷ்ய இராணுவம்
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Sumithiran
உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவம் நடத்திய தாக்குதலில் 210 வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 14-வது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனில் இரு தரப்புக்கும் இடையே தீவிரமான சண்டை நடந்து வருகிறது.
210 பேர் கொன்று குவிப்பு
இந்த நிலையில் கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தை நோக்கி முன்னேறி வந்த உக்ரைன் இராணுவ வீரர்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 பேர் கொன்று குவிக்கப்பட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
இராணுவ தளபாடங்களும் நிர்மூலம்
மேலும் இந்த தாக்குதலில் துருக்கியிடம் இருந்து பெறப்பட்ட கவச வாகனங்கள் உள்பட உக்ரைன் இராணுவத்துக்கு சொந்தமான ஏராளமான இராணுவ தளவாடங்கள் நிர்மூலமாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து உக்ரைன் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

4ம் ஆண்டு நினைவஞ்சலி