தளபதியின் கொலை மிரட்டலுக்கு அஞ்சி டாங்கியுடன் உக்ரைன் படைகளிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்
தனது தளபதியின் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தான் செலுத்தும் இராணுவ டாங்கியுடன் உக்ரைன் படையினரிடம் சரணடைந்துள்ளார் ரஷ்ய வீரர் ஒருவர்.
மிஷா என பெயர் குறிப்பிடப்பட்ட குறித்த ரஷ்ய வீரர் வெள்ளைக்கொடியுடன் உக்ரைனில் தனக்கு அரசியல் அடைக்கலம் வழங்குமாறு தெரிவித்து சரணடைந்துள்ளார்.
போரிட மறுத்தால் கொலை செய்யப்படுவீர்கள் என தமது தளபதி அச்சுறுத்தியதாகவும் இதனால் தன்னுடன் பணியாற்றிய சக வீரர்கள் உயிரைக் காப்பாற்ற தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உக்ரைனில் இனிமேலும் போரிடுவதில் அர்த்தமில்லை என தாம் கருதுவதாகவும் ஊருக்கு திரும்பினால் கண்டிப்பாக தாம் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சரணடைந்த ரஷ்ய வீரருக்கு உக்ரைன் இராணுவ அதிகாரிகளின் அனுமதியுடன், உக்ரைன் குடியுரிமையும் 7,500 பவுண்டுகள் உதவித்தொகையும் உக்ரைன் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.
