உக்ரைனில் மக்கள் வெளியேற உதவிய பாலத்தை தகர்த்தது ரஷ்ய படை
russia
ukraine
war
destroyed
bridge
By Sumithiran
உக்ரைன் நாட்டில் செர்னிஹிவ் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இந்த நகரில் தண்ணீர், மின்சாரம் கிடையாது. இங்கு பொதுமக்கள் வெளியேற உதவிய முக்கிய பாலத்தை ரஷ்ய படைகள் குண்டுவீசி அழித்துள்ளன.
இந்தப் பாலம்தான் மக்களுக்கு மனித நேய உதவிகள் சென்றடையவும் உதவியது. இந்தப் பாலம் அங்குள்ள டெஸ்னா ஆற்றைக்கடந்து, செர்னிஹிவ் நகரை தலைநகர் கீவ்வுடன் இணைக்கும்.
இந்தப் பாலத்தை ரஷ்ய படைகள் தரை மட்டம் ஆக்கியதை பிராந்திய ஆளுநர் வியாசெஸ்லாவ் சாஸ் உறுதி செய்துள்ளார். இது செர்னிஹிவ் நகர மக்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி