ரணிலுடன் இணையும் சஜித் கட்சி எம்.பிகள்..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் விரைவில் இணைவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் என்னுடன் பேச்சு நடத்தி வருகின்றனர் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கட்சி அரசியலுக்காகக் காலையில் ரணிலை விமர்சிப்போர் மாலையில் எம்முடன் வந்து பேச்சு நடத்துகின்றனர்.
இணைவதற்கு சிறந்த தருணம்
தாம் இணைவதற்கு இதுவே சிறந்த தருணம் எனவும் கூறுகின்றனர். இதன்படி அவர்கள் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
அன்று 'ரணில் - ராஜபக்ச' என விமர்சித்தவர்கள் இன்று 'ரணில் சேர்' என விளிக்க ஆரம்பித்துள்ளனர் என இதன்போது ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி