கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டது பாரிய விரிசல் - சம்பந்தனை பதவி விலகுமாறு பகிரங்கமாக கூறிய உறுப்பினர்!

M. A. Sumanthiran Rajavarothiam Sampanthan S. Sritharan Sri Lanka Tamil National Alliance
By Kalaimathy Nov 14, 2022 05:35 AM GMT
Report

இரா.சம்பந்தன் உட்பட அனைத்து தமிழ் தேசிய தலைவர்களும் தோற்றுப் போன தலைவர்களே. அவர்கள் உடனடியாக பதவி வில வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளின் நலன் பேணும் அமைப்பு அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்த நிகழ்வு தொடர்பில் ஆரம்பத்தில் பல சந்தேகங்கள் இருந்தன. காலையில் எழுந்தவுடன் இரண்டு மூன்று பத்திரிகைள் பார்ப்பது வழமை. யாழ்ப்பாண பிராந்திய பத்திரிகை ஒன்று, இரண்டு பேரை முதன்மைப்படுத்தி அவர்களின் தயார்ப்படுத்தலில் இந்த நிகழ்வு நடைபெற இருக்கின்றது என்று ஆசிரியர் தலையங்கம் அல்லது வேறு பந்தியில் எழுதப்பட்டிருந்தது.

அதையும் பார்த்தேன். எனக்கு இது தேவையா? இதில் அரசியல் விளையாடப் போகிறதா? இதில் உள்ள சாதக பாதகம் பற்றி இரண்டு பக்கமும் யோசித்து விட்டு தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

கூட்டமைப்பு - மக்கள் இடையே பாரிய இடைவெளி

கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டது பாரிய விரிசல் - சம்பந்தனை பதவி விலகுமாறு பகிரங்கமாக கூறிய உறுப்பினர்! | Sampanthan Tna Parliament Mp Sri Lanka Vavuniya Sl

ஒரு நேரத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் சம்மந்தன் ஐயாவின் தலைமையில் வவுனியாவில் கூடியிருந்த வேளை, யாழ் ஊடகவியலாளர் முன்னாள் சிரேஸ்ட போராளிகளை அழைத்து வந்து இந்த தேர்தலில் எங்களையும் இணைத்து போட்டியிட வேண்டும்.

போராளிகளுக்கான வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று கேட்ட போது, ஒரேயடியாக அதற்குரிய தகுந்த காரணம் இப்போது இல்லை. போராளிகளை இப்போது இணைக்க முடியாது என சம்மந்தன் ஐயா கூறிவிட்டார்.

மேலும் கூட்டமைப்புக்குள் இருக்கின்ற உட்கட்சி முரண்பாடுகள் அது மக்களுக்கும் எங்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை கொண்டு வந்திருக்கின்றது. இது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களையும் பாதிப்பதால் இந்த விடயத்தை சொல்கின்றேன்.

விடுதலைப்புலிகளால், தலைவர் பிரபாகரனால் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதனால் அதனுடைய வீழ்சியோ அல்லது மக்களிடம் இருந்து அந்நியப்படுகின்ற ஒரு நிகழ்சித் திட்டத்திட்டமோ எல்லோரையும் பாதிக்கும்.

அதுமட்டுமன்றி எங்களுக்குள் வேறுபாடு இருக்கின்ற போது அதில் உங்களுக்கும் பங்கு இருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற போது தலைவர் விடுகின்ற தவறுகளை அல்லது ஒரு பங்காளிக் கட்சி விடுகின்ற தவறுகளை எப்படி அதில் இருக்கின்றவர்கள் சுட்டிக்காட்ட முடியுதோ அதேயளவுக்கு போராளிகளாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது.

உண்மையை மறைத்த சம்பந்தன் 

 கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டது பாரிய விரிசல் - சம்பந்தனை பதவி விலகுமாறு பகிரங்கமாக கூறிய உறுப்பினர்! | Sampanthan Tna Parliament Mp Sri Lanka Vavuniya Sl

அரசியல் ரீதியாக உங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உங்களின் நலன்களிலும் எதிர்காலத்தில் செயற்படக்கூடிய ஒரு அமைப்பு தவறு செய்யும் பட்சத்தில் அதை தடுக்க அல்லது எதிர்த்து குரல் கொடுக்க கூடிய தகமை உங்களுக்கும் இருக்கிறது.

அண்மையில் கூட்டமைப்பினுடைய தலைவர் சம்மந்தன் ஐயா எங்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை. ஒற்றுமையாகத் தான் இருக்கின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் பிளவு இல்லை என்ற ஒரு கருத்தை கூறியிருந்தார்.

அது சுத்தப் பொய். நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லை. ஒரே கட்சிக்குள்ளேயே பல்வேறு பிரச்சனைகள் இருகின்றன.

இதனை எங்களுடைய தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைத் தலைவராக இருகின்ற அண்ணன் தவராசாவே அண்மையில் ஏற்றுக் கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கூறிய கருத்து உண்மையானது என அவர் ஏற்றுக் கொண்டார்.

அப்படியெனில் முக்கிய தலைவர்களே உணர்திருக்கிறார்கள். தவறுகள் நடக்கின்றது என்பதை அவர்களே உணர்ந்துள்ளார்கள். சம்பந்தன் ஐயா அதை மறைக்கப்பார்கின்றார். அவரால் தற்போது ஒழுங்காக செயற்பட முடியாது.

இதனை பொதுவெளியில் சொல்லவும் நான் தயாராக இருகின்றேன். அவரால் செயற்பட முடியாத நிலமை இக்ருகிறது. அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு கொண்டு இருக்கிறது.

தமிழ் மக்களுக்கு சிறிந்த தலைவர் இல்லை

கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டது பாரிய விரிசல் - சம்பந்தனை பதவி விலகுமாறு பகிரங்கமாக கூறிய உறுப்பினர்! | Sampanthan Tna Parliament Mp Sri Lanka Vavuniya Sl

தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு தலைவர் இல்லாத நிலமை இருந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழினமும் பாதிக்கப்படப்போகிறது. ஒட்டுமொத்த தமிழர் என்கின்ற போது அதற்குள் விடுதலைப்புலிகள், போராளிகள் அடங்காது எப்படி இருக்க முடியும்.

நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படுகின்ற ஆரம்ப காலங்களில் தலைவருடன் சந்திப்பை ஏற்படுத்துகின்ற போது, ஒன்றாக பேசிய போது, நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனைப் பார்த்து தலைவர் கூறினார்  'செல்வம் நாங்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவம். கடந்த காலங்களில் நாங்கள் எல்லோரும் பிழை விட்டிருந்தால் எல்லாவற்றையும் மறந்து எங்களுடைய மக்களுக்காக இந்த கூட்டை உருவாக்கி அரசியல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். நாங்கள் ஒன்றாக இந்த மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற கருத்தை கூறியிருந்தார்'.

அதற்கு பின் நாங்கள் எவ்வளவோ விட்டுக் கொடுப்பு செய்து பிரிந்திருந்த போராட்ட இயக்கங்கள், மிதவாதக் கட்சிகள் இணைந்து இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினோம். ஆனால், இன்று கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக கூட்டமைப்பு உள்ளது.

முதலில் கூட்டமைப்பில் உள்ள பழைய தலைவர்கள் எல்லாம் தங்களது பதவிகளிலிருந்து விலகி போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். போராளிகள் என்று நான் சொல்வது இளைஞர்களை. ஒவ்வொரு கட்சியிலும், இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

எங்களுடைய பழைய தலைவர்கள் எல்லோரும் தோற்றுப் போன தலைவர்களாக தான் இருக்கிறார்கள். தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், இரா.சம்மந்தன் ஆகியோர் கூட தோற்றுப்போன தலைவர்களாக இருக்கிறார்கள்.

ஏனைய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கூட தாங்கள் தொடர்ந்தும் கட்சியினுடைய தலைவர்களாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுக்க கூடாது.

தகுதி இல்லாத தலைவர்கள் 

கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டது பாரிய விரிசல் - சம்பந்தனை பதவி விலகுமாறு பகிரங்கமாக கூறிய உறுப்பினர்! | Sampanthan Tna Parliament Mp Sri Lanka Vavuniya Sl

வேணும் என்றால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்துவிட்டு போகலாம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமை ஊடாக அவர்கள் வரலாம். ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்களினுடைய தலைவர்கள் எல்லோருமே தோற்றுப்போன தலைவர்கள் தான்.

மக்களுக்கான விடுதலையை வென்று கொடுக்க முடியாத தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் தலைமைப் பதவியில் இருப்பதற்கு தகுதி இல்லாத தலைவர்களாக தான் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

இது உங்களுடைய விடயம். நீங்கள் போரளிகள். எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி, நலன்புரி சங்கம் என்ற பெயரில் போராளிகளின் எதிர்காலம், அவர்களுடைய தேவைகள் தொடர்பாக செயற்படவுள்ளீர்கள்.

அவர்களுடைய தேவைகள் உண்மையாக உணரப்பட வேண்டும். அவர்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இனத்தின் ஒரு விடுதலைக்காக ஆயுதம் தூக்கிப் போராடிய ஒரே குற்றத்திற்காக இந்த போராளிகள் வெறுக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு போரளிகளும் மன ரீதியாக உடைந்து போய் இருகிறார்கள். அவர்களது மனங்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சிலருடைய நடவடிக்கைகளே இதற்கு காரணம். சமூகத்தில் சில இடங்களில் அவர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். உரிய மரியாதை வழங்கப்படுகிறது.

சில இடங்களில் சாதாரண ஒரு பேராளியாக கூட மதிக்கப்படாத நிலமை இருந்து கொண்டிருக்கிறது. மாற்றுத் திறனாளிகளான போராளிகள் கூட நாங்கள் இந்த இனத்திற்காகவா போராடினோம் என்றொரு ஏக்கம், ஏமாற்றம் அவர்களுக்கு இருக்கிறது. அதனை நாம் உணர்கின்றோம்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். தலைவர்கள் ஒரு போதும் ஒற்றுமைப்படப் போவதில்லை. எனது அனுபவத்தில் அரசியல் தீர்வுக்காய் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக ஏதோ அரசியல் நடந்து கொண்டு தான் இருக்குமே தவிர, உரிமைக்காக தமிழ் தலைவர்கள் என தமிழ் தேசியத்தின் பேரில் சொல்லிக் கொண்டு, அரசியல் நடத்தும் எந்த தலைவரும் உண்மையான அக்கறையாக செயற்படாது தான் உள்ளார்கள்.

கூட்டமைப்பை விமர்சித்த வினோ

கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டது பாரிய விரிசல் - சம்பந்தனை பதவி விலகுமாறு பகிரங்கமாக கூறிய உறுப்பினர்! | Sampanthan Tna Parliament Mp Sri Lanka Vavuniya Sl

நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி தமிழ் மக்களிள் உரிமைக்காக கடைசிவரை இணையப்போவதில்லை. விக்கினேஸ்வரன் ஐயா அண்மையில் பிரிந்து செயற்படுவது தொடர்பில் நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் எனக் கூறினார். முழுக்க முழுக்க அவர் தான் காரணம்.

அவர் உடைப்பதற்காக, சிதைப்பதற்காக, அவருடைய நிகழ்சி நிரலை கொண்டு சென்று விட்டு இன்று கூட்டமைப்பில் இருந்து பிரிந்திருப்பதை உணர்ந்திருக்கின்றேன் என்கிறார். தமிழ் மக்களின் கூட்டுக்குள் அவர் மிகப்பெரிய ஒரு குற்றவாளி.

அதேபோல் தான் ஏனையவர்களும். கூட்டமைப்பு என்பது பலமான ஒரு சக்தி. அதில் தவறுகள் இருகின்றன. அண்மையில் கூட்டமைப்பை பற்றி எனது முகநூலில் விமர்சனம் செய்தேன். கூட்டமைப்பு ஒரு விபச்சார இல்லமாக செயற்படுவதாக நான் குறை கூறினேன்.

அங்கத்துவ கட்சி ஒன்றின் செயலாளர் என்னுடைய கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியின் சின்னத்தை விபச்சார வீடாக விமர்சிப்பதாக தெரிவித்து கடிதம் வந்தது.

நான் விமர்சிப்பேன். தொடர்ந்தும் விமர்சிப்பேன். உள்ளுக்குள் இருந்தாலும், சரி வெளியில் இருந்தாலும் சரி தொடர்ந்தும் விமர்சிப்பேன். ஏனென்றால் இந்த கட்சியை போராளிகள், ஏனையவர்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டோடு வளர்தெடுத்தடுத்தவர்கள்.

அதற்காக பாடுபட்டவர்கள் நாங்கள். இவர்கள் தங்களது சொந்தக் கட்சியை வளர்தால் கூட அது கூட்டமைப்பின் பிரச்சனை தான். தமிழரசுக் கட்சிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம். அதனை நாங்கள் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டு விமர்சிப்போம்.


தமிழரசுக் கட்சிக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். ரொலோவுக்குள் பிளவு என்றாலும், புளொட்டுக்குள் பிளவு என்றாலும் கூட்டமைப்புக்கு பாதிப்பு தான். அதனையே பொது வெளியில் கூறுகின்றோம்.

அதற்கு பிறகு தமிழரசுக் கட்சிக்குள் இருந்தே அந்தக் கட்சியை விமர்சிக்கிறார்கள். அதுவும் தவறு தானே. நாங்கள் விமர்சித்தால் பிழை. ஆனால் ஒரே கட்சிக்குள் விமர்சித்தால் பார்த்துக் கொண்டு இருகிறார்கள்.

அந்தச் செயலாளர் இப்போது பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். விளக்கம் கேட்டாரா? தவராசா தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா, சிறிதரன் தவறு விடுகின்றார் என்று விளக்கம் கேட்டாரா? அல்லது சுமந்திரன் தவறு விடுகின்றார் என விளக்கம் கேட்டாரா? தவறுகள் கடந்த காலங்களில் எல்லாம் நடந்தது தான்.

நாங்கள் இனியும் திருந்துவதில் பலனில்லை. தமிழ் தலைவர்களில் எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வருடத்திற்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு காணப்போவதாக அதிபர் சொல்கிறார். இவர்கள் விழுந்தடிக்துக் கொண்டு பேசுவோம் என்கிறார்கள். ஆனால் இவர்கள் ஒன்றுபட்டு போய் அங்கு பேசப்போவதில்லை.

ஒரே கட்சியாக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மணிவண்ணன் இன்று இரண்டு கட்சியாகிவிட்டார்கள். இதேபோல் நாளை எத்தனை கட்சிகள் எப்படி எப்படி உடையப் போகுதோ தெரியாது.

ரணிலுடன் பேச முற்பட்டால் சிலர் பேச முடியாது, சிலர் நிபந்தனை போடனம், அப்படி, இப்படி என சொல்வார்கள். நாங்கள் ஒன்றுபட மாட்டோம் என அவர்களுக்கு தெரியும். அதனால் பிரச்சனைக்கு தீர்வு இல்லை.

முன்னாள் போராளிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் வழங்க அனுமதி தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசினேன். ஆனால், அவர்கள் வேறு காரணங்களை கூறி நிராகரித்து விட்டார்கள்.

போராளிகள் மத்தியில் ஒற்றுமை வராது என சொல்வதற்கு இடம் கொடுக்க முடியாது. ஒற்றுமையாக செயற்படுங்கள். அன்று போராளிகளுக்கு உதவி செய்ய போவதாக சொன்ன யாழ் ஊடகவியலாளர் இன்று இங்கு இருப்பவர்கள் உதவி செய்ய வருவதை குற்றம் சாட்டுகின்றார்.

அன்று அவர் உண்மையில் போராளுக்கு உதவி செய்ய சென்றாரா அல்லது தன்னுடைய நலன்களுக்காக சென்றாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம்” எனத் தெரிவித்தார்.  

நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024