முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வீடு எரிக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றின் அதிரடி தீர்மானம்
Sri Lanka Government
Court of Appeal of Sri Lanka
Sanath Nishantha
By Laksi
முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் (Sanath Nishantha) வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 68 சந்தேகநபர்களையும் விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் தீர்மானம்
இந்த வழக்கின் சாட்சிகள் இருவர் உயிரிழந்தமை மற்றும் காவல்துறையினர் சாட்சியங்களை நீதிமன்றில் முன்வைக்க தவறியதன் காரணமாக சந்தேகநபர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த மாதம் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி