நாமலிடம் கிண்டலாக கேள்வி எழுப்பிய சனத் ஜெயசூர்யா
நாமலை கிண்டலடித்த சனத்
அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் எரிபொருள் நெருக்கடி தொடர்பான சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
"வீரர்கள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து, ஒரு அணியில் இருந்து நீக்கப்பட்டால், அவர்கள் குழு கூட்டங்களுக்கு வந்து புதிய கப்டனை சங்கடப்படுத்துவதற்குப் பதிலாக வேறு விளையாட்டில் ஈடுபடும் கண்ணியம் இருக்க வேண்டும்! #GotaGoHome” என்று ஜெயசூர்யா இன்று ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை, சனிக்கிழமை போக்குவரத்துத் துறை பிரதிநிதிகளுடனான சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டதை அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆதரித்தார்.
நாமலுக்கு உரிமை உண்டு
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கஞ்சன விஜேசேகர, இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடல் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நாமல் ராஜபக்சவிற்கு இந்தக் கலந்துரையாடல்களில் பங்குகொள்ள உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தொழிற்சங்கப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து எப்போதும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உதவியவர் என அவர் மேலும் தெரிவித்தார்.


