சர்வதேச சரணடைவை மறுத்த கோட்டாபய சதியும் நாமலின் பிரித்தானிய உரை இரகசியங்களும்
சிறிலங்காவின் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தமது ராஜபக்ச அதிகார மையத்துடன் எதிர்ப்புக்காட்டினாலும் 2009 முள்ளிவாய்க்கால் படுகொலை காலத்தில் போராளிகளை சரணடைய அழைப்பு விடுத்தவர் மகிந்த ராஜபக்ச என்பதை அண்மையில் சரத்பொன்சேகா சொல்லியிருப்பதான ஒரு பெரிய பூச்சுற்றலை செய்தபடி நாமல் ராஜபக்ச லண்டனில் தரையிறங்கி விட்டார்.
அன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் ராஜபக்கள் பேச்சுவார்த்தை நடத்தி, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை சரணடைய அனுமதித்தாக சரத் பொன்சேகா சொன்னாலும் அவரே வெளியிட்ட காணொளியில் தலைவர்கள் படையினரிடம சரணடைய வந்தால், மட்டுமே ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று கோட்டாபய கூறுவதும் சர்வதேச மேற்பார்வையுடன்; கீழ் அவர்கள் சரணடைய முயற்சித்தால், இராணுவம் தாக்குதலைத் தொடரவேண்டும் அவர் வெளிப்படையாக சவேந்திர சில்வாவுக்கும் அறிவுறுத்தியமை தெரிந்தது.
அதாவது சர்வதேச மேற்பார்வையுடன் போராளிகள் சரணடைந்தால் அவர்களை படுகொலை முடியாது. மாறாக அவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தால் அதனை கச்சிதமாகவும் இரகசியமாகவும் செய்ய சாத்தியப்படும் சதியின் அடிப்படையில் தான் சவேந்திர சில்வாவுக்கு கோட்டாய இதனை குறிப்பிட்டார்.
இந்த நகர்வுகள் இடம்பெற்றபோது அங்கிருந்த ஒரு படைமுகம் இந்த உரையாடல்களை படம்பிடிப்பதை அறியாத சவேந்திர சில்வா, கோட்டாபயவின் குறிப்பிட்ட வழிமுறைகளை தனது துணை அதிகாரிகளுக்கு சாதாரணமாகத் தெரிவித்த இந்த காணொளி கடந்த 18 அன்று சரத் பொன்சேகாவால் வெளிப்படுத்தபட்ட நிலையில் பிரித்தானியாவில் உள்ள கருத்து சுதந்திரத்திர தளத்தில் வந்து ராஜபக்சக்களின் அரசியில் வாரிசு ஊருக்கு உபதேச உரைகளை வழங்க தலைப்படும் நிலையில் பிரித்தானிய புலம்பெயர் தமிழ் சமுகம் அதனை ஊடறுப்பதால் எதிர்வினைகள் வருகின்றன.
இதனால் நாமலின் உரையை கேம்பிரிஜ் யூனியன் செய்ததுபோல மீளெடுக்காமல் அதனை எப்படியாவது அரங்கேற்ற ஒக்ஸ்போர்ட்; யூனியன் இரகசியமாகவும் கமுக்கமாகவும் நகர்கிறது.
அதன் அடிப்படையில் ஒக்ஸ்போட் யூனியனில் நாமல் ராஜபக்ச உரைக்குரிய நாள் முன்னகர்த்தப்பட்டு அது தற்போது நாளை 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டயஸ்போரா தமிழர்களின் போராட்டங்களும் சடுதியாக முன்னகர்த்தப்பட்ட நிலையில் இந்த விடயங்கள் உட்பட்ட விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு.....
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |