பாடசாலை மாணவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை - அம்பாறையில் சம்பவம்
Ampara
Sri Lanka Police Investigation
By Vanan
அம்பாறையில் பாடசாலை மாணவன் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், வீட்டின் பின்புறம் ஒதுக்குப்புறமான பகுதியில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்ததற்கான காரணம்
மாயதுன்னை பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுக்குள் வைத்திருந்த உரிமம் இல்லாத துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது.
சிறுவனின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவன் இறந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி