தமிழர் பகுதியில் திடீரென உயிரிழந்த ஆசிரியை
வவுனியா (Vavuniya) வடக்கு நெடுங்கேணி சேனைப்பிலவு பகுதியில் ஆசிரியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
சுபாஜினி தயானந்தன் 47 வயதுடைய என்ற நான்கு பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நெடுங்கேணி பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்பித்து வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
உடலில் விசம் பரவியமை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிகாலையில் பாடசாலை செல்வதற்காக வீட்டில் ஆயத்த வேலைகளை முன்னெடுத்த குறித்த ஆசிரியை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் நெடுங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.
அவரது உடலில் விசம் பரவியமையே மரணத்திற்கான காரணம் எனவும், இரவு நேரங்களில் விச ஊர்வன ஏதாவது கடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |