பாடசாலை விடுமுறை..! கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Vanan
அடுத்த பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
எனினும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் ஜூன் 12ஆம் திகதிக்குப் பின்னர் அது தொடர்பில் அறிவிக்கலாம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது மே 29ஆம் திகதி முதல் நேற்றைய தினம் 8 ஆம் திகதி வரை இடம்பெற்றதன் காரணமாக கடந்த நாட்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்