ஆழ்கடலில் வெடித்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி! இறந்தவர்களின் உடல்களை மீட்க முடியுமா...!
By pavan
111 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண்பதற்காக புறப்பட்டு சென்ற டைட்டன் நீர்மூழ்கி உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த 5 பேரும் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க கடலோரப்படை அறிவித்திருந்தது.
இந்நிலையில் டைட்டன் நீர்மூழ்கியில் பயணித்து, உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்படுமா என்பது குறித்து தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடலோர காவல்படையினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், "ஆழ்கடலில் நீருக்கடியில் தரைப்பரப்பு மிகவும் சிக்கலாக இருக்கிறது. ஆழ்கடலில் டைட்டன் நீர்மூழ்கியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அழுத்தம் மிக அதிகமாக இருப்பதால் 5 பேரின் உடல்களை மீட்பது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.”என தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்