ரணில் அதிபரானதன் இரகசியம் வெளிவந்தது
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
President of Sri lanka
By Sumithiran
ரணில் அதிபராக தெரிவு செய்யப்பட்டதன் இரகசியம்
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியை பொறுப்பேற்கும் முன்னர் தன்னிடம் கேட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க, அதிபராக தெரிவு செய்யப்பட்டதன் இரகசியமும் தான் தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
பதவிகள் அவசியமில்லை
தனக்கு பதவிகள் எதுவும் அவசியமில்லை எனவும் நாட்டுக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவேன் எனவும் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த சாமர சம்பத் தஸநாயக்க, ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
