ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு: நிறைவேறிய சட்டமூலம் - அரசின் நிலைப்பாடு
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஜனாதிபதி உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (11/09/2025) உரையாற்றிய போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு தனித்தனியாக நிர்வகிக்கப்படுகிறது என்றும், அது மாற்றமின்றி உள்ளது.
பாதுகாப்பு குறித்து கவலை
தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட எந்தவொரு நபரும் பாதுகாப்பு இடர் குழுவிடம் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம். இந்த குழு மதிப்பீடு செய்து தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கு பொறுப்பாக உள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 111 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கோட்டாபய ராஜபக்சவுக்கு 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உரித்துரிமைகள் சட்டத்தின் கீழ், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் மறைந்த ஜனாதிபதிகளின் மனைவிமாருக்கான சலுகைகளுக்காக அரசாங்கம் 2024 ஆம் ஆண்டில் ரூ. 98.5 மில்லியனை செலவிட்டதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அவை வருமாறு, ஹேமா பிரேமதாச - ரூ. 2.687 மில்லியன் சந்திரிகா குமாரதுங்க - ரூ. 16.43 மில்லியன் மகிந்த ராஜபக்ச - ரூ. 54.62 மில்லியன் மைத்ரிபால சிறிசேன – ரூ. 15.77 மில்லியன் கோட்டாபய ராஜபக்ச – ரூ. 12.28 மில்லியன் ரணில் விக்ரமசிங்க – ரூ. 3.49 மில்லியன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
