அழுக்கு முட்டை வீச்சுக்கு அஞ்சி நாடாளுமன்றை சுற்றி பலத்த பாதுகாப்பு
Sri Lanka Police
Parliament of Sri Lanka
Egg
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஏன் அழுகிய முட்டைகள் வீசப்படக்கூடாது என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்த கருத்து காரணமாக நாடாளுமன்றத்தை சூழவுள்ள வீதிகளில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த பாதுகாப்பு நேற்று நாடாளுமன்றம் கூடிய போது மேற்கொள்ளப்பட்டது.
அழுக்கு முட்டையால் அடிக்க
நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பிரச்சினைகளை பேசாவிடின் ஏழு சிறைச்சாலைகளுக்கு சென்றாலும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வரும் அனைவரையும் அழுக்கு முட்டையால் அடிக்க நேரிடும் என அசேல சம்பத் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அதன்படி, அவர் அளித்த வாக்குமூலம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, நாடாளுமன்றத்தை சுற்றி கூடுதல் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
