இராஜாங்க அமைச்சராக சீதா குமாரி அரம்பேபொல நியமனம்
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Prime minister
By Thulsi
மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல (Seetha kumari Arambepola) நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனமானது ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (11.9.2024) வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார இராஜாங்க அமைச்சர்
அத்துடன், சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.
தொழில் ரீதியாக மருத்துவப் பயிற்சியாளரான வைத்தியர் சீதா அரம்பேபொல சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார்.
மேலும், திறன் மேம்பாடு, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் முன்னாள் இராஜாங்க அமைச்சரான இவர், 2019 டிசம்பர் முதல் மார்ச் 2020 வரை மேல் மாகாண ஆளுநராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி