ஐக்கிய தேசிய கட்சிக்கு விழுந்த அடி : சஜித் பக்கம் தாவிய பேராசிரியர்
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர், துறைமுகங்கள், துறைமுக நகரங்கள் மற்றும் துறைமுகம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் சிரேஷ்ட பேராசிரியரான பிரசன்ன பெரேரா (Prasanna Perera) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa)ஆதரவு அளிக்கும் வகையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற அவர், 2016-2017 காலப்பகுதியில் துறைமுக அதிகாரசபையின் பதில் தலைவராகவும் பிரதித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
பல்வேறு உயர் பதவிகள்
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்திலும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையிலும் பல உயர் பதவிகளை வகித்துள்ளார். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பாடம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்டு அந்த துறைகள் தொடர்பான பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |