எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவரை கொடூரமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர் (காணொளி)
Police spokesman
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Kiruththikan
மஹரகம காவல்துறை
எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவரை சிரேஷ்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மஹரகம லங்கா ஐஓசி பெட்ரோல் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலை மஹரகம காவல்துறை கட்டுப்பாட்டு பிரிவின் கட்டளைத் அதிகாரி மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்த பின்னர் தொட்டிகளைக் காட்டுமாறு கோரப்பட்டமையினாலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
