பிரான்ஸில் தமிழர் வாழும் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி
பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் தலைநகர் பாரிஸில் எரிபொருள் தட்டுப்பாட்டு சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சிலர் முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, அதிக விலைக்கு பெட்ரோல் விற்ற ஐவர் கொண்ட குழு ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இக் கைது Val-de-Marne மாவட்டத்திற்குட்பட்ட Arcueil நகரில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
19 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட ஐவர் கொண்ட குழு அதிக விலைக்கு பெட்ரோல் விற்றுள்ளது. சுமார் இருபது கான்கள் பொருத்தப்பட்டு இந்த எரிபொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறையின் பின்னணியில் தந்திரமாக பெட்ரோல் விற்றதற்காக கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்கள் காவல்துறையின் காவலில் வைக்கப்பட்டனர்.
சட்டவிரோத பெட்ரோல் விற்பனை
20 கொள்கலன்களில் பெட்ரோல் நிரப்பி, ஒரு லீட்டர் பெட்ரோல் 3.50 யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இத்தகவலை அறிந்துகொண்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லிட்டர் பெட்ரோல் பறிமுதல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் எரிபொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வருகிறது. திங்கட்கிழமை நிலவரப்படி பிரான்சுக்குள் எரிபொருள் இல்லாமல் 40% வீதமான நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடல்
[8HBGJ8
இதேவேளை, இல் து பிரான்ஸ் உட்பட பல பகுதிகளில் எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்களை குறி வைத்து எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக விலையில் விற்பனை செய்யப்படும் எரிபொருளை மக்கள் அவசர தேவைக்காக பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.