3 வருடங்களாக 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - தந்தை கைது!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Pakirathan
14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அம்பாறை - பொத்துவில் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொத்துவில் பிரதேசத்தில் காவல்துறை சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையே குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
பாதிக்கப்பட்ட14 வயது சிறுமி கடந்த 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடு வழங்கியுள்ளார்.
அதனையடுத்து, காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு தந்தையை கைது செய்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி