டொல்பின்களுடன் நீந்திய சிறுமியை இரையாக்கிய சுறா மீன்!
அவுஸ்திரேலியாவில் டொல்பின்களுடன் நீந்திய 16 வயது சிறுமி ஒருவர் சுறா மீன் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகர் பெர்த்தில் உள்ள ஆற்றில் சுறா கடித்ததில் 16 வயது சிறுமி உயிரிழந்ததாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெர்த்தின் ஃப்ரீமண்டில் துறைமுகப் பகுதியில் உள்ள ஸ்வான் ஆற்றின் போக்குவரத்துப் பாலம் அருகே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுறா சிறுமியைத் தாக்கியது
A 16-year-old girl has been attacked and killed by a shark while swimming in a river in Perth, Western Australia, local authorities said. https://t.co/YAaw0LD3Cr
— CNN International (@cnni) February 5, 2023
பலத்த காயங்களுடன் தண்ணீரிலிருந்து இழுக்கப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுறா தாக்குதல் நடந்தபோது, சிறுமி ஆற்றில் டொல்பின் கூட்டத்துடன் நீந்துவதற்காக ஜெட் ஸ்கீயிலிருந்து குதித்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எந்த வகையான சுறா சிறுமியைத் தாக்கியது என்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் மேற்கு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் சுறா தாக்குதல் கடைசியாக நவம்பர் 2021-ல் பெர்த்தின் போர்ட் கடற்கரையில் இடம்பெற்றிருந்தது.
