தெற்கில் ஒரே நாளில் மற்றுமொருவரை பலியெடுத்த இரண்டாவது துப்பாக்கிசூடு
மற்றுமொரு துப்பாக்கிசூடு
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள்
உயிரிழந்தவர் 31 வயதுடைய வெயங்கொட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பேச்சாளர் தெரிவித்தார்.
சுடப்படடு காயமடைந்த பெண் அவ்வழியே சென்றவர் என ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் இறந்தவரின் மனைவி சுடப்பட்டாரா என்பது இதுவரை தெரியவரவில்லை காயமடைந்த குழந்தை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையிலும், மற்றைய பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை எம்பிலிப்பிட்டிய - மித்தெனிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.