தலவத்துகொட துப்பாக்கிச் சூடு : கைதான இருவருக்கும் விளக்கமறியல்
புதிய இணைப்பு
தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதிக்கு முன்பாக இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மதுவரித் திணைக்கள அதிகாரி மற்றும் வர்த்தகர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலங்கம காவல்துறையிரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
தலவத்துகொடவில் உள்ள சனசமூக மண்டபத்திற்கு வெளியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு இன்று காலை (19.07.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வர்த்தகர் ஒருவருக்கும் கலால் அதிகாரி ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தினால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வாக்குவாதம் நீடித்ததால், வர்த்தகர் துப்பாக்கியை , கலால் அதிகாரியின் முன் காட்டியுள்ளார்.
இதனையடுத்து கலால் அதிகாரி அவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்து அருகிலுள்ள சுவரில் நான்கு முறை சுட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தலங்கம காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்த பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற தலங்கம காவல் நிலைய அதிகாரிகள் துப்பாக்கியைக் கைப்பற்றி சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
