தென்பகுதியில் துப்பாக்கிசூடு -ஒருவர் படுகாயம்
Shooting
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் கதிர்காமம் - வெடிஹிதி கந்த வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றநிலையில், எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில்
மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 46 வயதுடைய பிரதீப் லக்மால் என்பவரே காயமடைந்து கதிர்காமம் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி