அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி: 16 பேர் காயம்
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், வார இறுதியில் சிகாகோவில் பலவேறு இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இது நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து, அமெரிக்காவில் தலை தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பிரச்சினை குறித்த விவாதம் மேலும் வலுப்பெற்று வருகிறது.
ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு
நாட்டில் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு விதிவிலக்கு அளித்ததே கட்டுப்பாடற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு காரணமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த வார இறுதியில் இதுவரை சிகாகோ நகரம் முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது,
வார இறுதியில் நகரில் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஐந்து துப்பாக்கிச் சூடுகள்
[
ஒரு சம்பவத்தில், தெற்கு அல்பானியில் அதிகாலை 12:19 மணியளவில் 37 வயதான பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த பெண் ஒரு வாகனத்தில் பயணித்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
பாதிக்கப்பட்டவர் தலை மற்றும் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்.
ஆபத்தான நிலையில் ஸ்ட்ரோஜர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை அதிகாலை 2:27 மணியளவில் ஒரு வாகனத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 34 வயதுடைய நபர் கண்டுபிடிக்கப்பட்டார் ஆபத்தான நிலையில் சிகாகோ பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், சிகாகோவில் வார இறுதியில் இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன, இதில் இருவர் இறந்தனர்.
நகரத்தில் மொத்தம் ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு
கொடூரமான டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு மாதத்திற்குள் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
டெக்ஸாஸ் துபாக்கி சூட்டில், 18 வயது இளைஞன் தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்து, 19 மாணவர்களையும் 2 ஆசிரியர்களையும் சுட்டுக் கொன்றான். இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச் சூடுகளில் ஒன்றாகும்.
