அமெரிக்காவில் மர்ம நபர் அச்சுறுத்தல்
shop
shoot
us
mystery person
By Vanan
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தில் உள்ள கடை ஒன்றிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் கடைக்குள்ளேயே ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தப்பியோடிய நிலையில், அவர் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இதுகுறித்த விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
