தமிழர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தால் பெரும் நெருக்கடி
தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் சில வருடங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தேயிலை தொழில் பெரும் நெருக்கடியை சந்திக்கும் அபாயம் இருப்பதாகவும் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு வருவதற்கு இளைஞர்கள் தயக்கம் காட்டுவதும், பெருந்தொகையான தமிழ் இளைஞர்கள் தோட்டங்களை விட்டு வெளியேறி தலைநகருக்கு வேலைக்குச் செல்வதும் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
உயர்கல்வி பெற்று அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்
உயர்கல்வி பெற்று அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்புரிந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றுமொரு பெரும் குழுவும் இதற்கு காரணம் என பாரிய தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்ட முகாமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதுவும் தோட்டத் தொழிலில் தொழிலாளர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர்.
வயதான தமிழர்கள் மட்டுமே இன்னும் கூலி வேலை செய்கிறார்கள். முதுமையில் இருந்து அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு தொழிலாளர்கள் பற்றாக்குறை தோட்டங்களை கடுமையாக பாதிக்கும் என்கின்றனர்.
தொழிலாளர் பற்றாக்குறையால்
தற்போதுள்ள தொழிலாளர் பற்றாக்குறையால், பல பெரிய தோட்டங்களில் உள்ள தேயிலை நிலங்கள் வரி அடிப்படையில் தோட்ட மக்களுக்கு பிரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
தோட்டங்களில் வேலை செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானம் வாழ்வதற்குப் போதாததால், வெளியூர் வேலைகளுக்குச் செல்வதாகத் தோட்டங்களில் வாழும் தமிழர்கள் கூறுகின்றனர்.
