கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இசைஞானி இளையராஜா!
இந்தியாவின் இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இளையராஜா உட்பட அவரது குழுவினர் இன்று (16) சென்னையில் இருந்து கொழும்பு வழியாக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி இளையராஜா உட்பட இசைக்குழுவினருக்கு சிறிலங்கன் விமான சேவையின் ஊழியர்கள் சிறப்பான வரவேற்பை வழங்கியதாக விமான சேவை நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
We are honoured to welcome onboard #SriLankanAirlines, Maestro Dr. @ilaiyaraaja, the legendary Indian musician and his team who are traveling to #Australia from Chennai via Colombo.
— SriLankan Airlines (@flysrilankan) September 16, 2022
They are expected to perform in #Sydney and #Melbourne on 17th & 18th September respectively. pic.twitter.com/vHWXVpMtGe
அவுஸ்திரேலியா இசை நிகழ்ச்சி
அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில்17 ஆம் மற்றும் 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ, எஸ்.பி.பி.சரண், சுவேதா மோகன், மது பாலகிருஷ்ணன் உட்பட பல இசை கலைஞர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
சென்னையில் இருந்து புறப்பட்ட இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.