ஆறு வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த 59 வயது நபர்!! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் இளவாலை காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 59 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தயார் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
சிறுமியின் தாயார் நிகழ்வு ஒன்றுக்குச் சென்றிருந்த நேரம் பக்கத்து வீட்டு நபர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்தார் என்று பாதிக்கப்பட்ட சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார்.
தாயார் இந்த விடயம் தொடர்பில் இளவாலைப் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் வாயைப் பொத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்ற குறித்த நபர், சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்தார் என இளவாலைப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்