இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கடன் எவ்வளவு தெரியுமா?
இலங்கையில் (Sri Lanka) சராசரி குடும்பம் ஒன்றிற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் தொகை இவ்வருடம் ஜுலை மாதத்திற்குள் 48 இலட்சமாக அதிகரித்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள (Vasantha Athukorala) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் அச்சு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஐந்து வருடங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை 26 இலட்சம் அதிகரித்துள்ளது.
அரசாங்கம் பெற்ற கடன்
2019 ஆம் ஆண்டில் ஒரு குடும்பத்திற்காக அரசாங்கம் பெற்ற கடன் தொகை 22,11471 ஆகும். இவ்வருடம் ஜூலை மாதம் வரையில் ஒரு குடும்பத்திற்காக அரசினால் பெறப்பட்ட கடன் தொகை 48,19256 என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை 26,06563 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டில் பெறப்பட்ட கடன்கள் காரணமாக ஒரு குடும்பத்திற்காக பெறப்பட்ட கடன் தொகை சுமார் 65 வீதத்தால் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டுக் கடன்
வெளிநாட்டுக் கடன்கள் காரணமாக ஒரு குடும்பத்திற்கு எடுக்கப்பட்ட கடன் தொகை 35% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கைகள் சுட்டிகாட்டுகின்றன.
இதற்கிடையில், 1972 - 1978 ஆம் ஆண்டில், ஒரு நபருக்கு ஒரு வருடத்தில் அதிகரித்த கடன் அளவு (கடன் அதிகரிப்பு) 158 ரூபாயாக இருந்தது, ஆனால் 2022-24 காலப்பகுதியில் தனிநபர் கடன் தொகை 104,287 ஆக அதிகரித்துள்ளதாகவும் பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |