சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க இலங்கையில் சர்வதேச குறுஞ்செய்தி மையத்தை செயல்படுத்த அனுமதி
இலங்கையில் மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக சர்வதேச A2P (Application-to-Person) குறுஞ்செய்தி சேவை டிஜிட்டல் மையத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி முறையின் அதிகப்படியான பாவனையானது மோசடி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு வழிவகுத்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ள குறுஞ்செய்தி பரிமாற்றங்களை முறைப்படுத்த ஒரு மையப்படுத்தப்பட்ட குறுஞ்செய்தி அமைப்பு வலையமைப்பு பாதுகாப்பு சாதன (SMS Firewall) தேவையானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முன்மொழிவு
அதன்படி, ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட தனியார் நிறுவனமான Infobip மூலம் சர்வதேச A2P குறுஞ்செய்தி சேவை மையத்தை செயல்படுத்துவதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பிரேரணை மற்றும் பரிந்துரைகளை மதிப்பீடு செய்வதற்காக நிதி அமைச்சு, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள், தொழில்நுட்ப அமைச்சு மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவொன்றை நியமிப்பதற்கான அதிபரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |