மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் சிறிலங்கா புலனாய்வு துறை..!
சிறிலங்கா புலனாய்வு பிரிவு தற்போது மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அண்மையில் அமெரிக்காவின் புலனாய்வு துறை தலைவர் வில்லியம் பேர்ன்ஸ் இலங்கை வந்து சென்றிருந்தார்.
மேற்குலக புலனாய்வு துறை
அதன் பின்னர் சிறிலங்கா அரசு மேற்குலக புலனாய்வு துறையுடனும் இணைந்து இயங்குகின்றது.
இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பான தகவல் உடனுக்குடன் மேற்குலகத்திற்கு பரிமாறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது மேற்குலக நாடுகளை பொறுத்தவரையில் அவர்களின் புலனாய்வு துறையையும் இலங்கை உள்வாங்கி செயற்படுவதாக பார்க்கபடுகின்றது.
இதேவேளை இந்தியாவின் செயற்பாட்டை பார்த்தோமானால், அதில் இலங்கையின் புலனாய்வு துறை ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றது.
இலங்கையின் புலனாய்வு துறை மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் இந்தியாவின் நடவடிக்கையை இலகுவாக அவதானிக்க முடிகிறது.”என தெரிவித்துள்ளார்.
