ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முயற்சி
Sri Lanka
Russian Federation
Sri Lanka Fuel Crisis
By Vanan
ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பான கோரிக்கையை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க உதவுமாறு இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ரஷ்யா பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கான அடுத்த கட்ட வழிமுறைகள் தொடர்பில் ரஷ்யா கவனம் செலுத்தியுள்ளதாக ரஷ்ய உள்நாட்டு அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், நிலையான நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது கருத்துரைக்க முடியாது எனவும், இந்த விடயம் தொடர்பான பரிசீலனைகள் ஆரம்ப கட்டத்தில் காணப்படுவதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்