வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி - நீதிமன்ற தீர்ப்பு!
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan protests
Independence Day
Black Day for Tamils of Sri Lanka
By Pakirathan
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட "வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி" எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்தேசியக் கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளடங்களாக ஏழு பேருக்கு எதிராக யாழ்ப்பாண காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
வழக்கின் தீர்ப்பு
குறித்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி எதிராளிகளை பிணையில் செல்ல அனுமதித்ததோடு, மே மாதம் எட்டாம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைத்தார்.
வழக்கின் எதிராளிகள் சார்பில் அதிபர் சட்டத்தரணி தவராசா மற்றும் மூத்த சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்